சிவஞானம், மைதிலி, ஐவன், சசி, நேருகா மற்றும் நிலா ஆகியோரால் விக்கம் வாழ் தமிழ் பிள்ளைகளுக்காக தமிழ் மற்றும் கலைப் பாடங்களை கற்பிப்பதற்காக விக்கம் தமிழ் கல்விக்கூடம் 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதல் வருடம் 23 பிள்ளைகளுடன் ஆரம்பித்து பின் மிகவும் பெரிய கல்விக்கூடமாக மாறியது.
பிள்ளைகளின் படிப்பை தவிர எமது தமிழ் மக்களின் மற்றய தேவை கருதி விக்கம் தமிழ் சமூக கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தலைவராக திரு சின்னப்பு தெய்வேந்ந்திரன் தெரிவு செய்யப்பட்டார். அடுத்த வருடம் திரு சி சிறீரஞ்பன் தலைவராக தெரிவுசெய்து இன்றுவரை பணிபுரிகிறார்.