கந்தர் அநுபூதி வரிகளுடன் பார்த்து படிக்க உடனே பலன் உண்டு

செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது. இறைவனின் திருவருளினால் அறிவு வாய்க்கப்பெற்றேன் என்கிற உண்மையை உணர்ந்தால் கல்விச் செருக்கு வராது. தமக்குக் கிடைத்த கல்வி அறிவும் ஞானமும் குகன் அருளால் கிடைத்தவை என்று உணர்ந்து, உலகப் பற்றிலிருந்து விடுபட்டு, ‘தர்மம் .. சத்யம்’ என்கிற ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் உத்தம சீலர்கள் செய்ய வேண்டியது இன்னொன்று உண்டு.

அது முருகப் பெருமானின் திரு நாமங்களை ‘மைந்தா குமரா’ என ஆர்ப்பு உய்ய மறவாது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே அவர்கள் கடைபிடித்த ‘சத்ய .. தர்ம’ வாழ்விற்கு நல்ல பயனைத் தரும் வழியாகும். அருணகிரியார் தான் முருகனால் ஆட்கொள்ளப்பட்டபொழுதே தனக்கு மெய்யறிவும் சகல வித்தைகளும் கிடைத்ததை திருவகுப்பில், அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறி என இமைப்பொழுதில் ஓதுவித்த வேதியன்

Similar Posts