திருமுருகன் திருவடிகள் போற்றி !

ரீமத் அருணகிரிநாதர் திருவடி போற்றி !

முருகன் தான் ஈசன் என்கிற சிவன் என்பதையும் ஆலகால விஷம் உண்டதும் முருகன் தான் என்ற உண்மையையும் விளக்கும் அருமையான திருப்புகழ்.

இந்த பாடலில் அருணகிரிநாதர் முதல் பாதியில் உண்மையான வரலாறையும் பிற் பாதியில் புராணங்களில் உள்ள தத்துவ வரலாறையும் கூறி விளக்கியிருப்பிப்பார்.

திருமூலரின் திருமந்திரம்!

“நஞ்சுண்டதும் தேவர்களை காத்தருளியதும் அதோமுகம் (அதோமுகம் என்றால் ஆறுமுகம்) கொண்ட தெய்வம் தான் ”

நஞ்சுண்ட வரலாறு தான் பிரதோஷ வழிபாடு என்றால் பிரதோஷ நாயகனே முருகன் தான்.

“திருமயிலை திருப்புகழ் ”

பாடல் :

அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு …… மதிகாளம்

அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண …… அகிலேச

நிமிர வருள்சரண நிபிட மதெனவுன
நிமிர சமிரமய …… நியமாய

நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர …… வருவாயே

சமர சமரசுர அசுர விதரபர
சரத விரதஅயில் …… விடுவோனே

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி …… தகுர்தாத

எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர …… எமதீச

இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ …… பெருமாளே.

சொல் விளக்கம் :

அமரும் அமரரினில் அதிகன் … சிறந்த தேவர்களில்
மேம்பட்டவனான இந்திரன்,

அயனும் அரியவரும் வெருவ வரும் … பிரம்மா, திருமால் ஆகியோர்
அஞ்சும்படி வந்த

அதிகாளம் அதனை … ஆலகால விஷத்தினை (அடக்குவதற்காக)

அதகரண விதன … மனச் சஞ்சலத்தை ஹதம் செய்பவனே,

பரிபுரணமமை அ(ன்)னவர்கரண … சிந்தை நிறைந்த சாந்தர்
மனத்தில் இருப்பவனே,

அகிலேச … அகில உலகிற்கும் ஈசனே,

நிமிர வருள்சரண … எம் தாழ்வு நீங்கி யாம் நிமிர்ந்திட உன் திருவடி
அருளவேண்டும்,

நிபிடம் அது என … (அவ்விஷம்) எம்மை நெருங்கி வருகிறது,
என்றெல்லாம் எல்லா தேவர்களும் முறையிட,

உன நிமிர … நினைக்கின்ற மாத்திரத்திலேயே,

சமிரமய … வாயு வேகத்தில்,

நியமாய … (சரணடைந்தவர்களைக் காப்பதுதான்) கடமையென்று

நிமிடமதனில் உணவல … நிமிஷ நேரத்தில் (அந்த விஷத்தை)
உண்டருளிய

சிவசுதவர … சிவனுடைய சிரேஷ்டமான குமாரனே,

நினது பதவிதர வருவாயே … உனது குகசாயுஜ்ய பதவியைத் தந்திட
வரவேண்டும்.

சமரச அமர சுர … ஒற்றுமையான பெருந்தன்மையுள்ள தேவர்களுக்கு

விதரபர அசுர … பகைவர்களாகிய அசுரர்கள் மேல்

சரத விரதஅயில் விடுவோனே … சத்தியமான ஆக்ஞாசக்தி வேலை
விடுவோனே,

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத …
(என்னும் அதே ஒலியில்)

எமர நடனவித … (முருகன் அடியாராகிய) எம்மவருக்கு ஏற்ற
நடனவகைகள் செய்யும்

மயிலின் முதுகில்வரும் … மயிலின் முதுகின் மேல் வருகின்றவனே,

இமைய மகள்குமர எமதீச … இமயராஜன் மகள் பார்வதி பெற்ற
குமரா, எம் இறைவனே,

இயலி னியல் … தகுதி வாய்ந்துள்ள

மயிலை நகரில் இனிதுறையும் … திருமயிலை* நகரிலே இன்பமாக
வாழும்

எமது பரகுரவ பெருமாளே. … எங்கள் மேலான குருதேவப்
பெருமாளே.

ஓம் சரவண பவ !

Similar Posts