கோயில் வரலாறு

விக்கம் தமிழ் சமூக கூட்டமைப்பின் 2011ம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் திரு. சின்னத்துரை சிறிரஞ்சன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். விக்கம் வாழ் சைவ மக்களுக்கு ஓர் கோயில் வேண்டும் என்றும் அது ஒரு முருகன் கோயிலாக அமைய வேண்டும் என்று தீர்மரணிக்கப்பட்டது. திரு சிறிரஞ்சனின் வேண்டுகோளுக்கு இணங்க கோயில் கைவிக்கத்தில் (High Wycombe) அமைவதால் கோயிலின் பெயர் உச்சி முருகன் கோயில் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் கோயிலில் தமிழில் வழிபாடு செய்வதென்றும் முடிவு எடுக்கப்பட்டது. விக்கம் தமிழ் சமூக கூட்டமைப்பினுள் விக்கம் தமிழ் கல்விக்கூடமும் உச்சி முருகன் கோயிலும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கோயில் நடாத்துவதற்கு ஓர் இடத்துக்காக திரு சிவகுரு றகுநாதன் மற்றும் திரு சிறிரஞ்சன் பல இடங்களுக்கும் சென்று கடசியாக திரு சிறிரஞ்சன் காசில்பீல்ட் சமுதாய மையத்தில் (Castlefield Community Centre)ஓவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் மாலை வழிபாடு நடாத்துவதற்கு அனுமதி பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து பலரிடமும் நன்கொடை பெற்று கோயில் தொடங்குவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டது. திரு. செ. தர்மபாலா முன்வந்து இந்தியாவில் இருந்து இறைதிருவுருப் படங்களை (பிள்ளையார் முருகன்-வள்ளி-தெய்வானை மற்றும் சிவன்-பார்வதி) நன்கொடையாக எடுத்து தந்தார்.

சித்திரை மாதம் 14ந் திகதி 2011ம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்பன்று கோயில் மிகவும் சிறப்பாக பக்த்தர்கள் படைசூல ஆரம்பிக்கப்பட்டது.

முருகப் பெருமானின் திருவருளாள் முருகனின் திருவுருவச் சிலை இந்தியாவில் இருந்து திரு. சீனிவாசனுடைய உதவியுடன் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு குடமுழுக்கு 15ம் திகதி ஆடி மாதம் 2012 ஆண்டு நடாத்தப்பட்டது. இந்த விழாவுக்கு சிறப்பு அருட்சுனையரான சிவருசி தர்மலிங்கம் சசிகுமார் வரவழைக்கப்பட்டதுடன் ஈலிங் துர்கை அம்மன் கோயிலின் குருக்களும் திரு சத்தியன் ஐயாவும் இனைந்து குடமுழுக்கு விழாவை மிகவும் சிறப்பாக நடாத்தினார்கள்.

எமது சங்கம் தொண்டு ஆணையத்தில் (Charity Commission) பதிவுக்கு அனுப்பப்பட்டு எமது யாப்பை (Constitution) முழுமையாக ஏற்று எம்மை பதிவு செய்தார்கள். பதிவு செய்த தொண்டு எண் (சுநபளைவநசநன (Registered Charity Number) 1147539 பதிவு செய்யப்பட்ட திகதி 31 வைகாசி 2012.

திருவள்ளுவர் ஆண்டு 2044 வாகை (விஜயவருசம்) துலாம் திங்கள் (ஐப்பசி மாதம்) 2ம் நாள் (18-10-2013) வெள்ளிக்கிழமை முழுமதித்திருநாள் (பூரணை திதியும்), தோணிநாள்விண்மீன் (ரேவதி நட்சத்திரமும்) கூடிய மிகுநல்வேளை (பனுலக்கின சுபமுகூர்த்த வேளையில்) 12மணி 45நிமிடம் தொடக்கம் 1மணி 59நிமிடம் வரையுள்ள திருநல்வேளையில் வள்ளி மற்றும் தெய்வானை அம்மையாருக்கு கரிமுகக்கடவுள் வழிபாட்டுடன் பூர்வாங்க கிரிகைகள் நடைபெற்று மகா குடமுழுக்கு நடைபெற்றது.

உச்சி முருகனின் திருவருளாளும் அடியார் பெருமக்களின் உதவியாலும் £200,000.00 ஓர் இடம் ஐப்பசி 2016ம் ஆண்டு வாங்கப்பட்டது Bridge Street, High Wycombe, Bucks HP11 2EL. மேலும் பல லட்சம் செலவு செய்து திருப்பணி (கட்டிட) வேலைகள் 6ம் திகதி மாசி மாதம் 2017 தொடங்கி 2018 முடிவில் நிறைவு பெறுகிறது. இன்றைய நிலையில் நாம் £550,000.00 திருப்பணி செய்துள்ளோம். அடியார்களினது நன்கொடை தனிப்பட்ட ஒரு சிலரின் கடன் உதவியாலும் மற்றும் வங்கி கடனாலும் இந்த திருப்பணியை செய்தோம்.

வாங்கிய புதிய கட்டிடத்தில் முதன்முறையாக 27 தை 2017ம் ஆண்டு சாந்தி பூசை அருட்சுனையரான சிவருசி தர்மலிங்கம் சசிகுமார் அருட்சுனையர் சுரேஸ்குமார் மற்றும் திரு சத்தியன் ஐயாவும் இனைந்து சிறப்பாக நடாத்தினார்கள்.

மேலும் இந்தியாவில் இருந்து கற் சுவாமிகள் ஐம்பொன் சுவாமிகள் மற்றும் பூசைக்கு வேண்டிய பல பொருட்களும் மடங்கல் (ஆவணி) 10ந் திகதி வந்து சேர்ந்து விட்டது. இப்போது சிற்ப வேலைக்காக சிற்ப கலைஞர்கள்; பாரதத்தில் இருந்து கூடிய விரைவில் வருவார்கள்.

மேலும் சுறவத் திங்கள் (தை மாதம் 2019) திருவள்ளுவர் ஆண்டு 2050 குடமுழுக்கு மிகவும் சிறப்பாக நடைபெறத் திருவருள் கைகூடவுள்ளது. ஈழத்திலிருந்து இரண்டு தமிழ் அருட்சுனையர்களும் எமது நடுவமாம் சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடத்தின் (Saivanerikoodam, Europapl. 1, 3008 Bern, Switzerland) செந்தமிழ் அருட்சுனையர்கள் நல்கையுடனும் எமது திருக்கோவில் வழிபாடு ஒழுக்கு பேணப்படும்.

எமது திருக்கோவில் அருட்சுனையர்கள் எவரும் தமக்கு தனியாக கொடை (தட்சணை) கோரமாட்டார்கள். ஆகவே அவர்களிடம் பணம் கொடுப்பதைத் தவிர்த்து, நீங்கள் விரும்பும் தொகையை பணியகத்தில் செலுத்தி உரிய பற்றுச்சீட்டினைப் பெற்றுக் கொள்ளவும்.

Similar Posts